What you will discover at SIA:
WHO WE ARE & WHAT WE BELIEVE

9500 NE 191st St, Bothell, WA 98011

எதிர்வரும் நிகழ்ச்சிகள்
.png)

போதகரிடம் இருந்து

சியாட்டில் தமிழ் அசெம்பிளி, கிறிஸ்துவைப் பின்பற்றும், இறைவனையும் மற்றவர்களையும் நேசிக்கும், ஒரு சபை. வழிபாட்டு ஆராதனைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் நம்பிக்கையை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை விசுவாசத்தில் பலப்படுத்தவும், கிறிஸ்துவின் அன்புடன் ஏழைகளை ஆதரிக்கவும், தேசத்திற்கான ஜெபத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கவும், தேவ கிருபையுடன் செயல்படுகிறோம்.
நம்மைச் சுற்றியுள்ள உலகம், காலக்கெடு மற்றும் சவால்களின் முடிவில்லாத அழுத்தங்களுடன் நமது பணியிடங்களில் விரைவான வேகத்தை உந்துகிறது. அன்றாடம் மாறுவது போல் தோன்றும் பழக்கமில்லாத சூழ்நிலைகளில் நமது குடும்பங்களுக்கு வலிமையின் நங்கூரமாக இருப்பதற்கு, தேவ பலன் தேவை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நம்பிக்கையும் பலமும் நம் மேலும், நம் குடும்பங்கள் மேலும் இருந்தால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியும்.
கிறிஸ்துவின் நிபந்தனையற்ற அன்பை அனுபவிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் அன்றாட போராட்டங்களில் உங்களை பலப்படுத்தி நிலைநிறுத்த கடவுளுடைய வார்த்தையின் தியானம், பிரார்த்தனை, மற்றும் ஆராதனைகள் மூலம் தேவ வல்லமையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நாங்கள் உங்களை சந்திக்கவும், தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினாராக, எங்கள் ஆராதனைகள் ஒன்றில் உங்களை வரவேற்கவும் விரும்புகிறோம்! வாருங்கள், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்!!

சபையை பற்றி
சியாட்டில் தமிழ் அசெம்பிளி, கிறிஸ்துவைப் பின்பற்றும், இறைவனையும் மற்றவர்களையும் நேசிக்கும், ஒரு சபை. வழிபாட்டு ஆராதனைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் நம்பிக்கையை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை விசுவாசத்தில் பலப்படுத்தவும், கிறிஸ்துவின் அன்புடன் ஏழைகளை ஆதரிக்கவும், தேசத்திற்கான ஜெபத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கவும், தேவ கிருபையுடன் செயல்படுகிறோம்.
ஆராதனைகள்
காலை ஆராதனை, சிறுவர் ஞாயிறு பாடசாலை மற்றும் இளைஞர் வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை வாராந்திர வேத ஆராய்ச்சி, மாதாந்திர உபவாச ஜெபம் / இரவு ஜெபம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் அறிவிப்பின்படி நடைபெறுகின்றன.